இந்தியாவின் துவக்க ஆட்டத் தூண் ரோகித் சர்மா என்று கூறினால் கூட மிகையாகாது. இலங்கயுடனான தொடரில் அசத்தி விட்டு அப்படியே இந்தியா வந்து ஆஸ்திரேலியர்களையும் நொருக்கியுள்ளார்.
இந்த 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தனது வேலையைக் காட்டிய ரோகித் சர்மா 5 ஆட்டங்களில் ஆடிய அவர் 296 ரன்களை குவித்துள்ளார். அதன் சராசரி 59.20 மேலும் அதன் ஸ்ட்ரைக் ரேட் 104 ஆகும். இப்படி அதிரடியாக ஆடிய இவர் இந்த தொடரில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.

Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
முதலில் 6000 ரன்களைக் கடந்த 9ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதனுடன் சேர்த்து இந்தியா பேட்டிங் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் ட்ராவிட் ஆகியோரை பின் தள்ளும் வகையில் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
குறைந்த ஆட்டங்களில்(இன்னிங்க்ஸ்) 6000 ரன் அடித்த இந்திய வீரர்கள் பட்டியளில் ரோகித் மேற்சொன்ன ஜாம்பவான்களை பின் தள்ளியுள்ளார். இந்த சாதனையை அவர் 162 ஆட்டங்களில் செய்துள்ளார். இவருக்கு முன்னால் தற்போது விராட் கோலி மற்றும் கங்குலி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
6000 ரன்களை குறைந்த ஆட்டங்களில் கடந்த இந்திய வீரர்கள் பட்டியல் :
- விராட் கோலி – 136 இன்னிங்சில்
- சௌரவ் கங்குலி – 147 இன்னிங்சில்
- ரோகித் சர்மா – 162 இன்னிங்சில்
- எம்.எஸ்.தோனி – 167 இன்னிங்சில்
- சச்சின் டெண்டுல்கர் – 170 இன்னிங்சில்
- ராகுல் ட்ராவிட் – 171 இன்னிங்சில்

Photo by Arjun Singh / BCCI / SPORTZPICS
நாக்பூர் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தன் 14-வது ஒருநாள் சதத்தை எடுக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை 4-1 என்று கைப்பற்றியது.
42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. தொடரை 4-1 என்று கைப்பற்றியதோடு தென் ஆப்பிரிக்காவுக்கு மேலே ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
ரோஹித் சர்மா (125) ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரரானார். அஜிங்கிய ரஹானே (61) தொடர்ச்சியாக 4-வது அரைசதம் கண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 60 ரன்களுக்கும் மேல் சராசரி கண்டு டிவில்லியர்ஸைக் கடந்துள்ளார் ரோஹித்.
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புவதாக தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கூறினார்.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 125 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பின்னர் அவர் கூறும்போது,
‘இந்த தொடர் சிறப்பான ஒன்று. ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடுவதை எப்போதும் விரும்புகிறேன். ஏனென்றால் அந்த அணி, சவாலானது. எதையும் எளிதில் விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள். அதனால் அந்த அணியுடன் எப்போதும் ரசித்து ஆடுகிறேன்.
இந்தப் போட்டியில் சாஹல் விளையாட வில்லை. ஆனால் அக்ஷர் சிறப்பாக பந்துவீசினார். குல்தீப்பும் சரியாக பந்துவீசினார். ரஹானே இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினார்.
MS
இது, இந்த அணியின் ஸ்திரத்தன்மையை சொல்வதாக இருக்கிறது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த அனைத்து வீரர்களுமே தங்கள் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
எந்த இடத்தில் எந்த நேரத்தில் இறங்கினாலும் அந்த சவாலை சரியாக வெல்பவர்களாக இருக்கிறார்கள். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்’ என்றார்.