ஒருதினப் போட்டிகள் என்றாலே அதற்கு தனி மவுசு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. என்னதான் தற்போது டி20 போட்டிகள் அடுத்தடுத்து மாற்றங்கலை ஏற்ப்படுத்து கிரிக்கெட் உலகின் வர்த்தகத்தை மாற்றியமத்தாலும், ஒரு தினப் போட்டிகளுக்கு அதே அளவு வரவேற்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஒருநாள் போட்டிகள் டெஸ்ட் போட்டிகளுக்கு மாற்றாக வந்து இது வரை 46 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்று வரை பல்வேறு அணிகள் மாறி மாறி அவ்வப்போது ஆதிக்கத்தை செலுத்தி வந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட அணிகள் ஒருதினப் போட்டிகளுக்காகவே செய்தது போன்று துவங்கிய காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக தன் ஆதிக்கத்தை செலுத்து வருகின்றனர.
அப்படிப்பர்த்தால் 46 வருடங்களில் இன்று வரை (அக்.25) கிட்டத்தட்ட 7853 சர்வதேச ஒருநாள் போட்டிகள் 26 சர்வதேச நாடுகளால் விளையாடப்பட்டுள்ளன. இதனைப் போட்டிகளிலும் எவ்வளவு ரன் அடிக்கப்பட்டிருகின்றது என தெரியுமா? தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகள் எவ்வளவு ரன் அடிக்கப்பட்டிருகின்றது, எந்த அணி அதிக ரன் அடித்திருக்கின்றது எனப் பார்ப்போம். (முதல் 10 அணிகள்)
10.வங்கதேசம் – 61218 ரன்கள்
வங்கதேச அணி 1971ல் இருந்து தனி நாடாக மாறியதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளை 80களின் மத்தியில் துவங்கிய வங்கதேச அணி தற்போது வரை 340 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அந்த போட்டிகளில் எல்லாம் சேர்த்து வங்கதேச அணி சார்பில் 61218 ரன் அடிக்கப்பட்டிருக்கிறது. அந்த அணி இதுவரை 42 சதங்களையும் 312 அரை சதங்களையும் அடித்துள்ளது. உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது என்பதற்கு வங்கதேச அணி ஒரு சிறந்த் முன்னுதாரனமாகும். அடிக்கடி ஒரு பொட்டியில் வெற்றி பெற்றாலே வானுயப் பறந்துவிடுவது இந்நாட்டு அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கு வாடிக்கையான ஒன்று.
- காலம் – 1986 முதல் 2018 வரை
- வீரர்கள் எண்ணிக்கை – 125
- போட்டிகள் -340
- மொத்த ரன் – 61218
- எதிர்கொண்ட பந்துகள் – 89765
- சதம் – 42
- அரை சதம் – 312