7.இங்கிலாந்து – 350 வெற்றிகள்
‘என்னடா இது கிரிக்கெட்டை கண்டுபிடித்தவனுக்கு வந்த சோதனை’ என்ற நிலைமையில் உள்ளது. ஆதி காலத்தில் இருந்து கிரிகெட் விளையாட்டை கண்டுபிடித்து, விதிகள் வகுத்து விளையாடி வந்த இங்கிலாந்து அணி இந்த பட்டியளில் 7ஆவது இடத்தில் உள்ளது ஆச்சரியம் தான். இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தில் என்ன தவறு நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நல்ல அணியை வைத்திருந்தும் ஒரே ஒரு டி20 உலககோப்பை தவிற எந்த ஒரு சர்வதேச வெற்றியையும் ருசிக்காத அணி இது. 350 வெற்றிகளுடன் 7ஆவது இடத்தில் இங்கிலாந்து.