6.தென்னாப்பிரிக்கா – 362 வெற்றிகள்
‘சொதப்பல்’ அணி என்ற பட்டத்துடன் உலக கிரிக்கெட்டில் வலம் வரும் அணி இது. உலக கிரிக்கெட்டை ஆளும் பல திறமையான வீரர்களை தன் அணியில் ஒவ்வொரு சகாப்தத்திலும் உலகிற்கு அளிக்கும் அணி இது. இவ்வளவு திறமை இருந்தும் இந்த அணியால் இன்னும் ஒரு உலகக்கோப்பை கூட வெல்ல முடியவில்லை என்பது புரியாத புதிர். இதுவரை இந்த அணி விளையாடிய போட்டிகளில் பாதிக்கு மேல் வெற்றியை ருசித்த அணி இது.