சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிப்பு... சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அடுத்த டி.20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1
சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிப்பு… சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அடுத்த டி.20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியையே இலகுவாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டி.20 தொடர் 23,26,28 மற்றும் டிசம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிப்பு... சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அடுத்த டி.20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அவர் ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடரிலும் விளையாடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடருக்கான கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுக்கு ஆஸ்திரேலிய அணியுடனான தொடரிலும் இடம் கிடைக்கவில்லை.

சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிப்பு... சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அடுத்த டி.20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோரும், ஆல் ரவுண்டர்களாக வாசிங்டன் சுந்தர்,அக்‌ஷர் பட்டேல், சிவம் துபே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஸ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணி; 

சூர்யகுமார் யாதவ், ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஸ் கான், முகேஷ் குமார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *