இதுல தப்பு எதுவுமே இல்லையே... ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்பட்டது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா !! 1
இதுல தப்பு எதுவுமே இல்லையே… ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்பட்டது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் ரோஹித் சர்மாவிற்கும், தனக்கும் இடையே எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது.

சென்னை அணிக்கு தோனி அடையாளமாக திகழ்ந்ததை போன்றே, தனது சிறப்பான கேப்டன்சி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரோஹித் சர்மாவை திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை தனது புதிய கேப்டனாக நியமித்தது.

இதுல தப்பு எதுவுமே இல்லையே... ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்பட்டது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா !! 2

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ரோஹித் சர்மா திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏற்புடையது அல்ல, மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வரும் நிலையில், கேப்டன்சி முடிவால் தனக்கும் ரோஹித் சர்மாவிற்கும் எவ்விதமான மன கசப்பும் ஏற்படவில்லை என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை விமர்சிப்பது சரியானதாக இருக்காது. நான் எனது அதிகமான போட்டிகளை ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் தான் விளையாடியுள்ளேன். நான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தாலும், எனக்கு ஏதேனும் சந்தேகமோ, ஆலோசனையோ தேவைப்பட்டாலோ நான் ரோஹித் சர்மாவிடம் தான் கேட்பேன். ரோஹித் சர்மாவே பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருவதால் கேப்டன்சியில் அவரது அனுகுமுறை எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். கேப்டன்சி முடிவால் எனக்கும் ரோஹித் சர்மாவிற்கும் எவ்விதமான மனகசப்பும் ஏற்படவில்லை, ஏற்படுவதற்கான தேவையும் இல்லை என்பதே எனது கருத்து. கேப்டன்சி மாற்றத்தால் எங்கள் இருவருக்குமிடையேயான உறவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *