இந்தியா-ஆஸ்திரேலியா தொடர், கணிக்கப்பட்ட இந்திய அணி
இலங்கை தொடர் முடிவிற்க்குப்பின் செப்டம்பர் மாத இறுதியில் ஆஸ்திரலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயனம் செய்யவுள்ளது. அந்த இந்தியாவுடன் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகஈல்ல் விளையாடவுள்ளது.
அதற்கான கணிக்கப்பட்ட இந்திய அணியைப் பார்ப்போம்.
1.ரோகித் சர்மா
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துவக்க ஆட்டக்கார்ர இவர் தான். இவருக்கு கண்டிப்பாக அணியில் இடம் உண்டு.
மேலும், நடந்து முடிந்த இலங்கை தொடரில், 5 ஒருநாள் போட்டிகளில் 302 ரன் குவித்துள்ளார். இதன் சராசரி 75 ஆகும்.
2.சிகர் தவான்
டெஸ்ட் அணியின் கழட்டிவிடப்பட்டு மீண்டும் காற்று அடித்தாற் போல வாய்ப்பை பயண்படுத்தி அணியில் தனக்கான இடத்திய உறுதி செய்து கொண்டார் சிகர் தவான்.

India will play three Tests, five one-day internationals and a Twenty20 game in Sri Lanka. The first Test starts on July 26 in Galle. / AFP PHOTO / ISHARA S. KODIKARA
இலங்கை தொடரில் 4 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 63.33 சராசரியில் 190 ரன் அடித்துள்ளார்.
3.விராத் கோலி (கேப்டன்)
அடுத்தடுத்து கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சாதனைகள் படைத்து வருகிறார் இந்திய அணியின் முழு நேர கேப்டன் விராத் கோலி.

இலங்கயுடனா ஒருநால் தொடரில் 5 போட்டிகளில் இமாலயா 110 சராசரியில் 330 ரன் குவித்துள்ளது இவரது ஃபார்மிற்க்கு எடுத்துக்காடாகும்.
4.மனீஷ் பாண்டே
இந்த இடத்திக்கு பல்வேரு விதமாக போட்டிகள் இருந்தாலும் தற்போதய ஃபார்ம் மற்றும் அனுபவத்தை வைத்து பார்த்தால் இந்த இடத்திற்க்கு சரியான பொருத்தம் மனீஷ் பாண்டே தான்.

இலங்கயுடனான ஒருநாள் போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலைகளில் நன்றாக விளையாடி இந்திய ணியை வெற்றிப்பதைக்கு அழைத்துச் சென்றவர் மனீஷ் பாண்டே.
5. தோனி ( விக்கெட் கீப்பர்)
இந்த இடத்திற்க்கு தற்போது மிகச்சரியான வீரர் தோனி தான் என்பதில் மற்றுக் கருத்து இல்லை.
இலங்கையுடனா தொடரிலே அணிவரும் இவரது ஆட்டத்தைப் பார்த்திருப்போம்.
6.கேதர் ஜாதவ்
அதிரடியாக ரன் சேர்க்க வேண்டிய இடம் இது. தற்போது இந்த இடத்தை கேதர் ஜாதவ் அடைத்திருந்தாளும் இந்த இடத்திற்க்கு நிறைய போட்டிகள் இருக்கின்றன.
7.ஹர்திக் பாண்ட்யா
இந்தியாவின் தற்போதய மிகச்சிறந்த வேகப்பன்ந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் இவர் கண்டிப்பாக அணியில் இடம் பெறுவார்.
8. ஜடேஜா
தற்போது ஓய்வில் இருக்கும் ஜடேஜா ஆஸ்திரேலிய அனியுடனான தொடரில் அணிக்கு திரும்புவார்.

9.குல்தீப் யாதவ்
அஷ்வினுக்கு பாதகமாக அவரது இடத்தை அடைத்துக் கொள்கிறார் குல்தீப் யாதவ்.
தற்போது நடந்துள்ள இலங்கை தொடரில் 2 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் சேர்த்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
10.அக்சர் படேல்
இவர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இல்லவிடினும் கண்டிப்பாக 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடிப்பது உறுதி.
இலங்கையுடன் 4 ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார் அக்சர் படேல்
11.புவனேஷ்வர் குமார்
இந்திய வேகப்பந்து வீச்சின் தலைமை இவர். கடந்த சில வருடங்களாகவே தன் பந்து வீச்சு வேகத்தையும் திறனையும் மேம்படுத்தியுள்ளார்.

இலங்கயுடன் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் 5-விக்கெட் ஹால் எடுத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
12.உமேஷ் யாதவ்
இலங்கை உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும் தனது அசுர வேகத்தினால் இந்திய அணியின்பந்து வீச்சிற்க்கு பலம் சேர்ப்பவர் உமேஷ் யாதவ்.
13.ஜஸ்பிரிட் பும்ரா
யார்க்கர், டெத் பவுளிங் என பேட்ஸ்மேனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பும்ரா. அவர் கண்டிப்பாக அணியில் நீடிப்பார்.
14.யுவராஜ் சிங்
இவருக்கு ஓய்வி அளிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையாகும் பட்சத்தில் ஆஸ்திரேலியத் தொடருக்கு அணியில் இருப்பர் என நம்பலாம்.
இதுவே இவருக்கு கடைசி வாய்ப்பகவும் அமையும் .
15. அஜிங்க்யா ரகானே

திறமை இருந்தும் போட்டிகளினால் அணியில் வெளியே இருப்ப்வர். அனுபவம் காரணமாக 15 பேர் பட்டியளில் இடம் பெறுவார்.