நியூசிலாந்து அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஒருநாள் தொடர் முடிந்துள்ள வேலையில் டி20 தொடர் நாளை டெல்லி பெரொஷா கோட்லா மைதானத்தில் துவங்கவுள்ளது.
ஒருநாள் தொடரில் எப்போதும் இந்தியாவின் கை ஓங்கி இருந்தாலும், இதுவரை நடந்த டி20 போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி எ8ப்போதும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 6 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளது 5 முறை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் சென்றுள்ளது. இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்பதே உண்மை.
ஒருநாள் போட்டியிலும் இந்தியாவிற்கு அவ்வளவு எளிதாக தொடரை கொடுத்துவிடவில்லை நியூசிலாந்து. மூன்றாவது போட்டியின் கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்று போராடி தொடரைக் கைவிட்டது என்பதே நிதர்சனம்.
தற்போது நாளை நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டிக்கான சிறந்த் இந்திய அணியை பார்ப்போம் :
1.சிகர் தவான்
இந்தியாவின் இடது கை துவக்க ஆட்டக்காரர் சிகர் தவான். இந்தியாவின் சில போட்டிகளில் தவானால் ஆட இயலவில்லை. பின்னர் நியூசிலானது தொடரில் 3 போட்டிகளில் ஒரு அரை சதத்துடன் 90 ரன் அடித்துள்ளார். இந்த தொடரில் சற்று சோபித்தால் இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக இருக்கும்.
2.ரோகித் சர்மா
சரியான நேரத்தில் கை கொடுப்பத்தில் கோலிக்குப் பிறகு ரோகித்தும் தேறிவிட்டார். இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் அசத்தலாக ஒரு சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் ரோகித். இந்த 3 போட்டிகள் டி20 தொடரில் ஒரு சதத்தை எதிர்பார்க்கலாம் அவரிடம் இருந்து.
3.விராட் கோலி (கேப்டன்)
உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் கேப்டன் கோலி, இந்த டி20 தொடரில் இரண்டு சதங்கள் அடித்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இந்த தொடரை வென்று நியூசிலாந்து அணிக்கெதிராக முதல் டி20 தொடரை வென்று கொடுக்க கோலிக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும்.
4.தினேஷ் கார்த்திக்
தற்போதுள்ள இந்திய அணியில் இவருக்கு சரியான இடம் இது தான். பல ஆண்டுகளாக அணிக்கு உள்ளே வெளியே என கபடியில் இருக்கும் தினேஷ் கார்த்திக், தற்போது நியூசிலாந்து தொடரை வென்ற அணியில் முக்கிய பங்காற்றியுள்ளார். தற்போது நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் ஆட பல வாய்ப்புகள் உள்ளது.
5.ஷிரியாஸ் ஐயர்

6.ஹர்திக் பாண்டியா
ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, டி20 தொடரில் ஜொலித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தர வாய்ப்புகள் அதிகம். இந்த டி20 தொடைர்ல் இவரிடம் சில சாதனகைகளை எதிர்பார்க்கலாம்
7.எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்)
தோனியின் சின்ன சின்ன மாற்றங்கள் மற்றும் கோலிக்கு கொடுக்கும் ஆலோசனைகள் தான் தற்போது ஹைலைட். அணிக்கு பேட்டிங்கிலும் சற்று சோபித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
8.ஆஷிஷ் நெஹ்ரா
இந்த போட்டியுடன் ஓய்வு பெறப்போகிறார் ஆசிஷ் நெஹ்ரா. இத்துடன் அனைத்து விதமான பஒட்டிகளில் இருந்து ஓய்வினை கடந்த சில வாரங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டார்

9.யுஜவேந்திர சகால்
ஒருநாள் தொடரின் தொடரைத் தீர்மானிக்கும் போட்டியில் பந்து வீச்சாளர்கள் நன்றாக அடிப்பட்ட வேலையில் அணிக்கு நம்பிக்கை கொடுத்து அணியை வெற்றியை நொக்கை நடைபோவ வைத்த வீரர்களில் சகாலும் ஒருவர்.
10.புவனேஷ்வர் குமார்
இவர் சர்வதேச கிரிக்கெட் ஆட துவங்கிய காலத்தை விட தற்போது ஸ்விங் குறையாமல் பந்தினை சற்று வேகமாக வீச கற்றுக்கொண்டுள்ளர் புவனேஷ்வர். இதனால் அவருடைய டெத் பௌலிங் தற்போது மிகவும் மேம்பட்டுள்ளது.
11.ஜஸ்பிரிட் பும்ரா
தற்போது உள்ள பந்து வீச்சாளர்களில் உலகின் மிகச் சிறந்த டெத் பௌலர் இவர். இந்தியா-நியூசிலாந்து இடையேயான மூன்றாவது போட்டியில் இவர் பந்து வீசிய விதம் அனைவரது பாராட்டினையும் பெற்றுள்ளது.