Cricket, India, Virat Kohli, Sri Lanka, Most Ducks

இலங்கை அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து அனைத்து போட்டிகளும் கொண்ட ஒரு முழு அளவிளான தொடரில் விளையாடவுள்ளது. மொத்தம் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்ன் மைதானத்தில் துவங்குகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டிலக்காக இரு அணி வீரர்களும் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டிய ஓய்வில் உள்ளார். அவருடைய இடத்தினை யார் நிரப்புவது, எது சிறந்த லெவனாக இருக்கும் என தற்போது பார்ப்போம்.

1.லோகேஷ் ராகுல்

இந்திய அணியின் ஒருநாள் செட்டப்பில் சரியாக ஃபிட் ஆகவில்லை எனறாலும், டெஸ்ட் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக அற்புதமாக ஆடி வருகிறார் ராகுல். இதற்கு முன் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் நன்றாக ஆடிய ராகுல், அடுத்தடுத்து 3 அரை சதங்களை அடித்து அசத்தினார்.Cricket, India, Sri Lanka, KL Rahul, Cheteshwar Pujara, Ajinkya Rahane மேலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 8 அரை சதங்களை அடித்துள்ளார் ராகுல். முரளி விஜயுடன் துவக்க ஆட்டக்காரராக கலம் கான சரியான துவக்க வீரர் இவர் தான்.

2.முரளி விஜய்  

கடந்த சில டெஸ்ட் தொடர்களாக காயம் காரணமாக அணியில் இருந்து வெளியே இருக்கிறார் முரளி விஜய். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பைத் தொடரிலும் நல்ல ஃபார்மில் இருப்பதை நிருபித்துள்ளார் முரளி விஜய்.   Cricket, India, Sri Lanka, Murali Vijay, Ishant Sharma

3.செட்டேஷ்வர் புஜாரா

இந்திய டெஸ்ட் அணியின் தூண். சரியான டெக்னிக். நன்றாக விக்கெட்டை நிருத்திக்கொள்ளக் கூடிய வீரர். இந்த இலங்கைத் தொடரில் இவருட்ம இருந்து ஒரு இரட்டை சதத்தை எதிர்பார்க்கலாம்.Cricket, Ranji Trophy, India

4.விராட் கோலி (கேப்டன்)

அடுத்தடுத்து கிடைக்கும் அணிகளை கேப்டனாக துவம்சம் செய்து வருகிறார் விராட் கோலி. தற்போது வரை மொத்தம் கேப்டனாக 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொடரையும் வைட் வாஷ் செய்யும் பட்சத்தில் 21 போட்டிகளில் வென்றுள்ள கங்குலியை பொன்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிப்பார், 27 டெஸ்ட் வெற்றியுடம் தோனி முதலிடத்தில் உள்ளார்.

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் போட்டி கணிக்கப்பட்ட இந்திய அணி 1

5.அஜின்கியா ரகானே

ஒருநாள் மற்றும் டி20 அணியில் நிரந்தர இடம் இல்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் அனைத்து நாட்டிலும் நன்றாக விளையாடக் கூடிய ஒரு அற்புதமான வீரர் ஆவார். இந்தியாவில் இன்னும் சிறப்பாக ஆடிக்கூடிய ராகனே இந்த இடத்தைப் பிடிப்பார்.இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் போட்டி கணிக்கப்பட்ட இந்திய அணி 2

6.ரோகித் சர்மா

ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அந்த இடத்திற்கு ஒரு சரியான ஆல் ரவுண்டர் தேவை. ஆனால், அவரது இடத்தை நிரப்பும் ஆல் ரவுண்டர் இந்தியாவில் தற்போது இல்லை. பந்து வீச்சில் அஷ்வின் மற்றும் ஜடேஜா இவரது இழப்பை சரி செய்வார்கள். ஆதலால், இந்த இடத்திற்கு சரியான ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக ரோகித் களம் இறகுவார்.Rohit Sharma, KL Rahul, Cricket, India, Sri Lanka,

7.விருத்திமான சகா (விக்கெட் கீப்பர்)

கீப்பிங்கில் இவர் சொதப்பும் பட்சத்தில் அடுத்து சஞ்சு சாம்சன் அல்லது தினேஷ் கார்த்திக் அந்த வாய்ப்பினை பெறுவார்கள் எனலாம். தற்போது பேட்டிங்கிலும் நன்றாக ஆடி வருகிறார் சகா.இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் போட்டி கணிக்கப்பட்ட இந்திய அணி 3

8.ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் காரணம் சொல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆல் ரவுண்டரக இவரது இடத்தை யாராலும் தற்போது நிரப்ப முடியாது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் இவர் அற்புதமாக விளையாடி இருக்கிறார். ஸ்பின்னராகவும், பேட்ஸ்மேனாகவும் மிக நன்றாக செயல்படுவார்.Ravi Ashwin

9.ரவிந்திர ஜடேஜா

அஷ்வினைப் போல் ஒருநாள் மற்றும் டி20யில் இருந்து கலட்டி வைக்கப்பட்டுள்ள வீரர். அவரின் திறமை இவருக்கும் இருக்கிறது. இந்த தொடரில் அசத்தக் காத்திருக்கிறார் ஜடேஜா.இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் போட்டி கணிக்கப்பட்ட இந்திய அணி 4

10.முகமது சமி

இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். ரஞ்சிக் கோப்பைத் தொடரிலும் அற்புதமாக பந்து வீசி வருகிறார். இந்த வருட ரஞ்சிக் கோப்பைத் தொடரில் தற்போது வரி 3 போட்டிகளில் ஆடியுள்ள சமி, 23.94 சராசரியில் 18 விக்கெட்டுகல் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் போட்டி கணிக்கப்பட்ட இந்திய அணி 5

11.உமேஷ் யாதவ்

சமீப காலமாக பந்து வீச்சில் நன்றாக மேம்பட்டுள்ளார் உமேஷ் யாதவ். இந்திய் ஆடுகளங்கள் இவருக்கு சற்று பரிட்சயமானது. இதனால் இந்த தொடரில் இவரது வேகத்தினால் இலங்கை வீரர்களின் ஸ்டம்புகள பதம் பார்த்துவிடுவார்.இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் போட்டி கணிக்கப்பட்ட இந்திய அணி 6

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *